ரஜினியின் வேட்டையன் படத்தில், ஃபஹத் ஃபாசிலின் கதாபாத்திரம் வெளியீடு
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 'ஜெய் பீம்' பட இயக்குநர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் வெற்றியினைத்தொடர்ந்து ரஜினி நடிக்கும் படம் இது. வரும் அக்டோபர் 10 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது. 'வேட்டைன்' திரைப்படத்தில் ரஜினிகாந்துடன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் ஆகியோரும் படம் முழுக்க நடித்துள்ளனர். நேற்று நடிகர்களின் கதாபாத்திரம் அறிமுகம் நடைபெற்றது. அதன்படி, 'நட்ராஜ்' என்கிற கதாபாத்திரத்தில், மிடுக்கான தோற்றத்தில் நடிக்கிறார் ராணா. அதனைத்தொடர்ந்து ஃபஹத் ஃபாசிலின் கதாபத்திரத்தின் அறிமுக வீடியோவும் வெளியானது. 'பேட்ரிக்' என்ற கலகலப்பான பாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் 'வேட்டையன்' படத்திற்கு இசையமைத்திருப்பது அனிருத்.