லைகா நிறுவனத்தில் ரெய்டு: அன்றே கணித்த ரா.பார்த்திபன்
கோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தில் நேற்று(மே.,16) அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர். வெளிநாடுகளிலிருந்து, முறைகேடாக பணம் பெற்றதாக புகார் வந்ததை அடுத்து, இந்த ரெய்டு எனக்கூறப்பட்டது. அந்த ரெய்டு நடவடிக்கை, நேற்று இரவு முடிவடைந்தது என செய்திகள் தெரிவித்தன. ஆனால், அப்போது ஏதேனும் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்து விவரங்கள் இல்லை. இந்நிலையில், பொன்னியின் செல்வன்-2 விழா மேடையில், ரா.பார்த்திபன் பேசிய வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், "பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானதும், ரெய்டு போக வேண்டும் என்றால்,PS வெளியாகும் திரையரங்குகளுக்கு போக சொல்ல வேண்டும். ஏனென்றால், படம் பல கோடிகளை ஈட்டும்" என்றார். அவர் கூறியதை போலவே ரெய்டு வந்ததும் ரசிகர்கள் அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.