'புஷ்பா' படக்குழுவிற்கு வந்த சோதனை; வருமானவரி துறையை தொடர்ந்து, அமலாக்க துறையும் சோதனை
செய்தி முன்னோட்டம்
சென்ற ஆண்டு, பான் இந்தியா படமாக வெளியாகி, பெறும் வெற்றி பெற்ற திரைப்படம், 'புஷ்பா'.
பல மொழிகளில் வெளியான இந்த திரைப்படத்தில், அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, பஹத் ஆகியோர் நடித்திருந்தனர்.
படத்தின் வெற்றியை தொடர்ந்து, படத்தின் இரண்டாம் பாகத்தை மும்முரமாக எடுத்துவருகின்றனர்.
அந்த படத்தின் தயாரிப்பாளர் 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்'.
இவர்கள் மீது வருமான ஏய்ப்பு புகார் வந்ததை அடுத்து, கடந்த இரு நாட்களாக, தயாரிப்பு நிர்வாகத்தின் அலுவலகத்திலும், இயக்குனர் சுகுமார் இல்லத்திலும், வருமானவரி துறை சோதனை நடத்தி வருகிறது.
இதோடு, தற்போது அமலாக்க துறையும் சோதனை செய்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
500 கோடி வெளிநாட்டு பணத்தை ஏமாற்றியதாக புகார் வந்ததை அடுத்து, இந்த சோதனை எனவும் கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
வருமான வரித்துறை, அமலாக்க துறை சோதனையில் சிக்கியுள்ள 'புஷ்பா' படக்குழு
#JUSTIN புஷ்பா தயாரிப்பு நிறுவனம், இயக்குநரிடம் சோதனை #Pushpa #MythiriMoviemakers #Sukumar #ITRaid #News18TamilNadu https://t.co/7dpn9FD15R pic.twitter.com/uFGh3I7EL7
— News18 Tamil Nadu (@News18TamilNadu) April 19, 2023