
நடிகர் சுதீப், அரசியலில் இறங்கியதை அடுத்து, அவர் படத்திற்கு தடை
செய்தி முன்னோட்டம்
கன்னட திரைப்பட உலகில் முன்னணி நடிகர் 'கிச்சா' சுதீப். தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, 'நான் ஈ', 'பாகுபலி','விக்ராந்த் ரோனா' போன்ற படங்களின் மூலம் பிரபலம் ஆனவர்.
இந்நிலையில், எதிர்வரும் கர்நாடக சட்டசபை தேர்தலில், ஆளும் பா.ஜா.க கட்சிக்கு ஆதரவாக, தாம் பிரச்சாரம் செய்யவிருப்பதாக அவர் அறிவித்தார்.
இதை திரையுலகினர் சிலர் வரவேற்றாலும், பிரகாஷ்ராஜ் போன்றோர் எதிர்த்தனர்.
இதனையடுத்து , தற்போது, தேர்தல் ஆணையத்திற்கு, சிவமோகாவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் ஒரு கடிதம் அனுப்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதில்,"சுதீப்பின் திரைப்படங்கள், வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே தேர்தல் நடைமுறை விதிகளை கருத்தில் கொண்டு, மே 13-ஆம் தேதிவரை அவரது படங்களை திரையிட அனுமதிக்கக்கூடாது" என கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
ட்விட்டர் அஞ்சல்
நடிகர் சுதீப் படத்திற்கு தடை
நடிகர் சுதீப் தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டு வருவதனால், தேர்தல் நடைமுறை விதிகளைக் கருத்தில் கொண்டு அவரது திரைப்படங்களை அடுத்த மாதம் 13 ஆம் திகதி வரை திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.#Sudeep #CinemaUpdate #Elections2023 #TrendingNow #NewsUpdate pic.twitter.com/hEqmBidWVy
— SooriyanFM - சூரியன்FM (@SooriyanFMlk) April 7, 2023