LOADING...
'The Rock' டுவைன் ஜான்சன் தனது சமீபத்திய எடை இழப்புக்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார்
டுவைன் "தி ராக்" ஜான்சன் திடீர் எடைக்குறைப்பு, ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

'The Rock' டுவைன் ஜான்சன் தனது சமீபத்திய எடை இழப்புக்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 10, 2025
03:26 pm

செய்தி முன்னோட்டம்

ஹாலிவுட் நடிகரும் முன்னாள் தொழில்முறை மல்யுத்த வீரருமான டுவைன் "தி ராக்" ஜான்சன் சமீபத்தில் எடையைக் குறைத்துள்ளார். அவரது இந்த திடீர் எடைக்குறைப்பு, ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. திங்களன்று 2025 டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் "இன் கான்வர்சேஷன் வித்..." தொடரின் போது அவரது உடலில் ஏற்பட்ட மாற்றம் விளக்கப்பட்டது. இன்னும் திடகாத்திரமாக தோன்றினாலும், வரவிருக்கும் திரைப்பட வேடத்திற்காக அவர் தற்போது உடல் எடையை குறைத்து வருவதாக ஜான்சன் தெரிவித்தார்.

திரைப்பட பாத்திரம்

'லிசார்ட் மியூசிக்' படத்திற்காக எடை இழப்பு

டேனியல் பிங்க்வாட்டரின் நாவலை அடிப்படையாகக் கொண்ட 'லிசார்ட் மியூசிக்' என்ற படத்திற்காக தனது எடை குறைப்பை ஜான்சன் வெளிப்படுத்தினார். இந்த படம் '70களில் இருக்கும் ஒரு விசித்திரமான மனிதனை மையமாகக் கொண்டது. அவர் 'சிக்கன் மேன்' என்று அழைக்கப்படுகிறார், மேலும் அவரது சிறந்த நண்பரான 70 வயது கோழியையும் மையமாகக் கொண்டுள்ளது. "ஸ்மாஷிங் மெஷினில் நான் செய்தது போல் மீண்டும் உருமாற வாய்ப்பு கிடைத்ததால் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்" என்று ஜான்சன் கூறினார். வரவிருக்கும் படமான 'தி ஸ்மாஷிங் மெஷினில்' தனது பாத்திரத்திற்காக நடிகர் தற்போது அதிக எடையை கூட்டும் முயற்சியில் உள்ளார். அதில் அவர் முன்னாள் MMA போராளி மற்றும் UFC ஹெவிவெயிட் சாம்பியனான மார்க் கெர்ராக நடிக்கிறார்.