
தனுஷ், நாகார்ஜுனா, சேகர் கம்முலா, இணையும் DNS: பூஜையுடன் தொடக்கம்
செய்தி முன்னோட்டம்
தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குனர் சேகர் கம்முலா. பல கமர்ஷியல் வெற்றி படங்களை இயக்கியவர் இவர்.
ஹாப்பி டேய்ஸ், ஃபிதா, லவ் ஸ்டோரி போன்ற படங்களை இயக்கிய சேகர், அடுத்ததாக தனுஷ்-ஐ இயக்கவுள்ளார்.
இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில், தனுஷ்-உடன் மற்றொரு முக்கிய வேடத்தில் நாகர்ஜூனாவும் நடிக்கிறார்.
முன்னதாக தனுஷ், தன்னுடைய 50வது படத்தை தானே இயக்கி, நடித்துள்ளார். அப்படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதோடு, தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' திரைப்படமும் சென்ற வாரம் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில்தான், அவருடைய அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த புதிய படத்திற்கு DNS என்று தாற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
DNS பூஜையுடன் தொடக்கம்
#DNS pic.twitter.com/MP0A52Y49Y
— Aakashavaani (@TheAakashavaani) January 18, 2024