இயக்குனர் விஷ்ணுவர்தன், பாலிவுட் நடிகர் சல்மான்கானுடன் இணையப்போவதாக தகவல்
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் விஷ்ணுவர்தன், தமிழ் சினிமா மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகிலும் பிரபலமான இயக்குனராக அறியப்படுகிறார்.
சந்தோஷ் சிவனிடம் துணை இயக்குனராக பணிபுரிந்து விட்டு, 'அறிந்தும் அறியாமலும்', 'பில்லா', 'பட்டியல்' போன்ற வெற்றி படங்களை தமிழில் இயக்கிய விஷ்ணுவர்தன், தற்போது ஹிந்தி படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்.
இவர் கடைசியாக இயக்கிய 'ஷேர்ஷா' திரைப்படம், வசூலை வாரிக்குவித்தது.
கார்கில் போரில் ல் வீர மரணம் அடைந்த விக்ரம் பத்ரா என்ற ராணுவ வீரரின் வாழ்க்கை படம் தான் இந்த திரைப்படம்.
தற்போது, விஷ்ணுவர்தன், தனது அடுத்த படத்திற்காக, பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார் சல்மான்கானுடன் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தை, இயக்குனர் கரண் ஜோஹரின், தர்மா ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது எனவும் கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
இயக்குனர் விஷ்ணுவர்தன் அடுத்த படம்
#ExclusiveNews megastar #SalmanKhan x #VishnuVaradhan project is based on army and #KiaraAdvani might be roped in as leading female. pic.twitter.com/W39LB4rmm0
— 🇸🇦〽️ιπ ⚙️ (@Bhaiophysicist) August 8, 2023