"எந்த வடிவத்திலாவது சினிமாவை தொடருங்கள்" :அல்ஃபோன்ஸ் புத்திரனுக்கு, சுதா கொங்கரா கோரிக்கை
செய்தி முன்னோட்டம்
நேற்று, பிரபல மலையாள இயக்குனர் அல்ஃபோன்ஸ் புத்திரன், தான் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால் சினிமாவை விட்டு விலகுவதாகவும், யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை எனவும் பதிவிட்டிருந்தார்.
இவரின் பதிவு அவரின் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகத்தினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
எனினும், "நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. நான் தொடர்ந்து பாடல்கள் மற்றும் குறும்படங்களை ஓடிடிகளுக்காக இயக்குவேன்" எனக்குறிப்பிட்டிருந்தார், அல்ஃபோன்ஸ்.
இந்த நிலையில், பிரபல இயக்குனர் சுதா கொங்கரா, அல்ஃபோன்ஸ்ற்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் பதிவாக அவர் வெளியிட்ட கோரிக்கையில், "நான் உங்கள் சினிமாக்களை மிகவும் மிஸ் செய்வேன்..ப்ரேமம் படம் எனக்கு எப்போதும் பிடித்த படங்களின் வரிசையில் இருக்கும்..தயவு செய்து எந்த வடிவிலாவது சினிமாவை தொடருங்கள்" எனக்கூறியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
அல்ஃபோன்ஸ் புத்திரனுக்கு, சுதா கொங்கரா கோரிக்கை
Dear @puthrenalphonse ,
— Sudha Kongara (@Sudha_Kongara) October 31, 2023
I’m going to miss your cinema. Premam is my all time favourite and kept me alive at my lowest. I would watch it on loop. It made me, a total cynic, fall in love again with the idea of being in love. Please continue to create in any form and I will… pic.twitter.com/maeRMHMBlD