யோகி பாபு நடிக்கும் 'போட்' திரைப்படத்தின் டீசர் வெளியானது
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் போட் திரைப்படத்தின் டீசர் துபாயிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் டீசரை, விஜய் சேதுபதி, நாகசைதன்யா, கிச்சா சுதீப், பிரித்திவிராஜ், அமீர்கான் ஆகிய முக்கிய பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.
இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படம் மூலம் அறிமுகமான சிம்பு தேவன், இரும்பு கோட்டையில் முரட்டு சிங்கம், புலி உள்ளிட்ட வித்தியாசமான திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இவர் தற்போது, யோகி பாபுவை வைத்து கடலில் நடக்கும் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையை, பேன் இந்தியா திரைப்படமாக இயக்கி வருகிறார்.இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கும் நிலையில், மாலி&மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்பு தேவனின், சிம்புதேவன் என்டர்டைன்மென்ட் நிறுவனங்கள் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
முழுக்க முழுக்க கடலில் படமாக்கப்பட்ட போட் திரைப்படம்
Set Sail For An Adventure 🛶 🌊@iyogibabu's #Boat Movie Teaser is Out Now ! 🎬
— Saregama South (@saregamasouth) December 16, 2023
▶ https://t.co/LR9s2LoEZu
A @chimbu_deven directorial#முழுக்க_முழுக்க_கடலில் #BoatSailingGlobally@Gourayy @Madumkeshprem @maaliandmaanvi @cde_off @GhibranVaibodha @madheshmanickam… pic.twitter.com/vvB4yOMCgb