
ராம் சரணின் 'கேம் சேஞ்சர்' படத்தின் எடிட்டரை மாற்றிய இயக்குனர் ஷங்கர்
செய்தி முன்னோட்டம்
இயக்குநர் ஷங்கர், ராம் சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தின் தொழில்நுட்பக் குழுவில் முக்கிய மாற்றத்தை செய்துள்ளார்.
கடந்த காலத்தில் கமல் நடித்த 'இந்தியன் 2' படத்தை இயக்கிய ஷங்கர், அந்த படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் கிடைத்ததால் 'இந்தியன் 3' படத்தின் பணிகளை நிறுத்தி, தற்போது முழுமையாக 'கேம் சேஞ்சர்' படத்தின் பணிகளை கவனிக்கிறார்.
இந்த படத்தில் ராம் சரண், எஸ்.ஜே.சூர்யா, கியாரா அத்வானி போன்றவர்கள் நடித்துள்ளனர், மேலும் இது பெரும் பொருட்செலவில் உருவாக்கப்படுகிறது.
இதற்கான ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக தமன், மற்றும் எடிட்டராக ஷமீர் முகமது பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் தற்போது 'கேம் சேஞ்சர்' படத்தின் எடிட்டரை மாறியுள்ளார். அதன்படி, கேம் சேஞ்சர் படத்திற்கு ரூபன் எடிட்டராக பணியாற்றுவார் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#GameChanger Editor replaced due to pressure from fans
— ScootyPep (@Bottlekaap) September 17, 2024
👉Amid the pressure to meet DilRaju's determination to release the film in December, #Shankar is navigating the post-production phase with great intensity. pic.twitter.com/JwFsltvRqA