Page Loader
இயக்குனர் மாரி செல்வராஜ் உயிரை காப்பாற்றிய வடிவேலு
மாமன்னன் திரைப்பட ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனர் மாரி செல்வராஜும், நடிகர் வடிவேலுவும்

இயக்குனர் மாரி செல்வராஜ் உயிரை காப்பாற்றிய வடிவேலு

எழுதியவர் Venkatalakshmi V
Jul 10, 2023
03:42 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் மாரி செல்வராஜ், சமூகம் சார்ந்த படங்களை எடுத்து வருகிறார். அவரது இயக்கத்தில் இதுவரை வெளியான அனைத்து படங்களும், வசூல்ரீதியாக மட்டுமின்றி, விமர்சனரீதியாகவும் பாராட்டை பெற்று வந்தது. சமீபத்தில் அவர் இயக்கத்தில், உதயநிதி, வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்த 'மாமன்னன்' திரைப்படம், பல கோடிகள் வசூலித்துள்ளது. இந்த படத்திற்கான வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழா மேடையில் பேசிய மாரி செல்வராஜ், தன்னுடைய உயிரை காப்பாற்றியவர் வடிவேலு எனக்கூறினார். திரையுலகில் நுழையும் முன்னர், தீவிரமான மன உளைச்சலில் இருந்ததாகவும், அப்போதெல்லாம் தற்கொலை எண்ணம் தலை தூக்கும் எனவும் கூறினார்.

card 2

மாரியின் வாழ்க்கையில் வடிவேலுவால் வந்த திருப்புனை 

அப்படி ஒரு முறை, தற்கொலை செய்ய முடிவெடுத்து, கடிதம் எழுத முற்பட்டபோது, டிவியில் வடிவேலு காமெடி ஓடிக்கொண்டிருந்ததாகவும், அதை பார்த்தபின் தனது மனசு லேசாகி, தற்கொலை எண்ணத்தை கை விட்டதாகவும் கூறினார். இவரின் இந்த பேச்சு, சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதன் பின்னர் தான், மாரி செல்வராஜ், சென்னை நோக்கி பயப்பட்டதாகவும் அந்த மேடை பேச்சில் தெரிவித்தார். மாமன்னன் படத்தில், அழுத்தமான வேடத்தில் வடிவேலு நடித்திருந்தது, பலரின் பாராட்டையும் பெற்றது. இவர்கள் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணையப்போகிறார்கள் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன