லியோ படத்தில் நடிகர் விஜய்யின் ஹேர் ஸ்டைல் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்தார் லோகேஷ் கனகராஜ்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், 'மாஸ்டர்' படத்திற்கு பிறகு, இரண்டாவது முறையாக நடிகர் விஜய்யுடன் கை கோர்த்துள்ள திரைப்படம் 'லியோ'. லியோ திரைப்படத்தில், விஜய்யின் வித்தியாசமான ஹேர் ஸ்டைல் குறித்து பல கருத்துக்கள் உலவி வந்தது. இந்நிலையில், ஒரு தனியார் நிகழ்ச்சிக்கு இயக்குனர் லோகேஷ் அளித்த பேட்டியில், இது குறித்த தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். லோகேஷ், லியோ படத்தில், விஜய் கதாபாத்திரத்திற்கு நீண்ட கூந்தல் வேண்டும் என குறிப்பிட்டாராம். அதற்காக, வாரிசு படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் போதே, நீண்ட கூந்தலை வளர்க்க தொடங்கினாராம் விஜய். 3 மாதங்கள் கழித்து டெஸ்ட் ஷூட் சென்று, ஒரு நாள் முழுக்க விதவிதமான ஹேர் ஸ்டைல்கள் ட்ரை செய்து, தற்போதைய லுக்கை இறுதி செய்தார்களாம் படக்குழுவினர்.