LOADING...
இயக்குனர் பாரதிராஜா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்
பாரதிராஜா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்

இயக்குனர் பாரதிராஜா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 05, 2026
02:36 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரும், 'இயக்குனர் இமயம்' என்று அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாகக் காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவதிப்பட்டு வந்த பாரதிராஜா, சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தேவையான இரத்தப் பரிசோதனைகள் மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முதுமை மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக அவருக்குச் சிறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதிராஜாவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அவருக்கு கடுமையான நுரையீரல் தொற்று இருப்பதால், தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், ICU வில் சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement