கமல் - விஜய் சேதுபதியுடன் இணையும் 'மருதநாயகம்'? அட்லீயின் மெகா பிளான்
செய்தி முன்னோட்டம்
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநராக உருவெடுத்து, பாலிவுட்டில் 'ஜவான்' திரைப்படம் மூலம் உலகளவில் பாக்ஸ் ஆபீஸில் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்த இயக்குநர் அட்லீ, தற்போது முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், ஒட்டுமொத்த இந்திய சினிமாவே பல தசாப்தங்களாக ஆவலுடன் காத்துக்கிடக்கும் கமல்ஹாசனின் வரலாற்று பிரம்மாண்டக் கனவு படைப்பான 'மருதநாயகம்' படத்தை மீண்டும் உருவாக்குவது குறித்து இயக்குநர் அட்லீ தனது விருப்பத்தைப் பகிர்ந்துள்ளார்.
அட்லியின் விருப்பம்
கமல்ஹாசன் - விஜய் சேதுபதி கூட்டணியில் பிரம்மாண்ட திட்டம்
'மருதநாயகம்' திரைப்படத்தை இயக்குவது தனது நீண்ட நாள் கனவு என்று இயக்குநர் அட்லீ வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
அதற்குத் தேவையான பிரம்மாண்ட பட்ஜெட் அமையும் பட்சத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இருவரையும் இணைத்து அப்படத்தை நிச்சயமாக உருவாக்குவேன் என்றும், இதில் விஜய் சேதுபதி நடித்தால் கதையே நிஜ ஹீரோவாக மாறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 1997-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நிதிப் பற்றாக்குறையால் பாதியிலேயே நின்ற 'மருதநாயகம்' திரைப்படம் இன்றுவரை சினிமா ரசிகர்களின் மிகப்பெரிய ஏக்கமாக உள்ளது.
இந்நிலையில், பான் இந்தியா அளவில் வசூல் சாதனை படைத்து வரும் அட்லீ இக்கூட்டணியில் அப்படத்தை மீண்டும் உருவாக்க விருப்பம் தெரிவித்திருப்பது ஒட்டுமொத்த இந்தியத் திரை உலகிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
VJS X KH pic.twitter.com/rhy5Z5SEau
— Video BackUp (@VideoBack09) October 5, 2026