Page Loader
விரைவில் பேபி சாரா, ஹீரோயின் சாராவாக அறிமுகமாகவிருக்கிறார்!
நாயகியாக களமிறங்கும் சாரா

விரைவில் பேபி சாரா, ஹீரோயின் சாராவாக அறிமுகமாகவிருக்கிறார்!

எழுதியவர் Venkatalakshmi V
Jul 25, 2023
12:29 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் AL.விஜய் இயக்கத்தில், நடிகர் விக்ரமுக்கு மகளாக, 'தெய்வ திருமகள்' திரைப்படத்தில் நடித்தவர் பேபி சாரா. அவரின் அபார நடிப்பு, வெகுளித்தனமான முகமும், பலரையும் கவர்ந்தது. தொடர்ந்து, AL.விஜய் இயக்கத்திலேயே, 'சைவம்' திரைப்படத்தில் நடித்தார். அதில் இடம்பெற்ற 'அழகு அழகு' பாடல் மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலம் ஆனார் சாரா. அதன் பின்னர், ஹிந்தி சினிமா, விளம்பரப்படங்கள் என நடிக்கப்போய்விட்டார். பல ஆண்டுகளுக்கு பின்னர், அவரை குமாரி.சாராவாக தமிழ் சினிமாவிற்கு மீண்டும் அறிமுகம் செய்தார் இயக்குனர் மணிரத்னம். 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில், இளம்வயது நந்தினி கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமாக பொருந்தி இருந்தார். தற்போது, அவரை நாயகியாக அறிமுகம் செய்யவுள்ளாராம் AL.விஜய். வரும் 2025ஆம் ஆண்டில், சாரா நாயகியாக நடிக்கும் திரைப்படம் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

ஹீரோயின் சாரா அறிமுகம்