'குற்ற பரம்பரை' புத்தகத்தை, வெப் தொடராக இயக்கும் சசிகுமார்
பிரபல நாவல் 'குற்ற பரம்பரை'யை எழுதியது, தமிழ் இலக்கிய சூழலில் பிரபல எழுத்தாளராக வலம் வரும் வேல.ராமமூர்த்தி. தமிழ் சினிமாவில் குணசித்திர, வில்லன் வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றவர். மண் மனம் சார்ந்த அவரின் பல படைப்புகளில், இந்த 'குற்ற பரம்பரை' நாவல் பலருக்கும் பிடித்தமான ஒன்று. அதை தொடராகவும், திரைப்படமாகவும் எடுக்க பாரதிராஜா முதல், பாலா வரை பலரும் முயன்று கைவிட்டுள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் 'சுப்ரமணியபுரம்' திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவானதை ஒட்டி, இயக்குனர், நடிகர் சசிகுமார் ஒரு ஊடகத்திடம் பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர், இந்த 'குற்ற பரம்பரை' நாவலை, வெப் தொடராக எடுக்கவுள்ளதாகவும், வரும் செப்டம்பர் மாதம் அதன் ஷூட்டிங் தொடங்கும் எனவும் கூறியுள்ளார்.