Page Loader
எல்லாப் புகழும் தினேஷ் மாஸ்டருக்கே; மனசிலாயோ பாட்டின் வெற்றி குறித்து ரஜினிகாந்த் பேச்சு
மனசிலாயோ பாட்டின் வெற்றிக்கு தினேஷ் மாஸ்டர் தான் காரணம் என ரஜினிகாந்த் பேச்சு

எல்லாப் புகழும் தினேஷ் மாஸ்டருக்கே; மனசிலாயோ பாட்டின் வெற்றி குறித்து ரஜினிகாந்த் பேச்சு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 22, 2024
04:40 pm

செய்தி முன்னோட்டம்

ஜெய் பீம் படத்தை இயக்கிய இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டக்குபதி உள்ளிட்ட பல பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் டீசர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. முன்னதாக, படத்திலிருந்து மனசிலாயோ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இதுகுறித்து பேட்டியளித்த ரஜினிகாந்த், பாடல் சிறப்பாக வந்து வெற்றி பெற்றதற்கு நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டர்தான் காரணம் என்றும், அவர் மிகவும் எளிமையாக அதை பண்ணியிருந்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

ரஜினிகாந்த் பேட்டி