Page Loader
"உங்களை யாரென்றே தெரியாது!": சிம்புவை இன்சல்ட் செய்தாரா விராட் கோலி?
சிம்பு, 'தக் லைஃப்' ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது இதை தெரிவித்தார்

"உங்களை யாரென்றே தெரியாது!": சிம்புவை இன்சல்ட் செய்தாரா விராட் கோலி?

எழுதியவர் Venkatalakshmi V
May 24, 2025
01:32 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகர் சிலம்பரசன் (STR). சிம்பு, சமீபத்தில் 'தக் லைஃப்' ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது, தான் விராட் கோலியால் 'இன்சல்ட்' செய்யப்பட்ட நிகழ்வை பகிர்ந்து கொண்டார். அந்த பேட்டி தற்போது சினிமா ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. சிம்பு கூறுகையில், "விராட் கோலி இந்திய அணியில் புதிதாக விளையாடத் தொடங்கிய போது, இவர் அடுத்த சச்சின் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. நண்பர்கள் அதை ஏற்கவில்லை. ஆனால் அவர் பின்பு எந்த உயரத்தில் சென்றார் என்பது அனைவருக்கும் தெரியும்," என்றார்.

'பத்து தல'

'பத்து தல' படத்தில் இடம்பெற்ற பாடலை பிடிக்கும் எனக்கூறிய விராட் கோலி

அதனைத் தொடர்ந்து அவர், "ஒருமுறை விராட் கோலியை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. நான் உற்சாகமாக சென்று, 'வணக்கம், நான் சிம்பு' என்று கூறினேன். அதற்கு அவர், 'யார் நீங்கள்? உங்களை எனக்குத் தெரியாது' எனக் கூறிவிட்டு சென்றுவிட்டார். எனக்கு 'இந்த அவமானம் தேவையா?' என்று தோன்றியது." இந்த சம்பவத்திற்கு பின்னர் சமீபத்தில் கோலி, SRH நிகழ்ச்சி ஒன்றில் சிம்பு நடித்த பத்து தல படத்தில் இடம்பெற்ற "நீ சிங்கம்தான்" பாடலை மிகவும் விரும்புவதாக கூறியிருந்தார். இதை நினைத்தபோதெல்லாம் தனக்கு ஒரு வகையான திருப்தி ஏற்படுவதாக சிம்பு தெரிவித்தார். எனினும், தற்போதும் தான் அந்த படத்தில் நடித்திருப்பதை பற்றியோ தன்னை பற்றியோ விராட் கோலிக்கு தெரியுமா என்பது தெரியவில்லை என வேடிக்கையாக கூறினார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post