சமந்தாவின் 'சாகுந்தலம்' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை அடைந்ததா?
நடிகை சமந்தாவின் நடிப்பில், சென்ற வாரம் வெளியான திரைப்படம் 'சாகுந்தலம்'. சரித்திர படத்தை, 3D வடிவத்திலும், நவீன கிராபிக்ஸ் பயன்படுத்தியும் எடுத்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். சென்ற பிப்ரவரி மாதமே வெளியாக வேண்டிய இத்திரைப்படம், சில காரணங்களால் தள்ளிப்போனது. படத்திற்காக சமந்தா கிட்டத்தட்ட அனைத்து ஊர்களுக்கும் சென்று ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டார் எனதான் கூறவேண்டும். ஆனால், இவ்வளவு செலவழித்து, படம் எதிர்பார்த்த வெற்றியையும், லாபத்தையும் அடைந்ததா என்றால், அது கேள்விக்குறி தான். சாகுந்தலம் வெளியான முதல் நாள், பாக்ஸ் ஆபிஸில் ரூ 3 கோடி மட்டுமே வசூலித்தது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இரண்டாம் நாளில், அனைத்து மொழிகளிலும் சேர்த்து ரூ. 1.85 கோடியை மட்டுமே வசூலித்தது என்றும் தெரியவருகிறது.
சாகுந்தலம் விமர்சனத்தை ஏற்க மறுத்தாரா சமந்தா?
படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த மூன்று நாட்களில் ரூ 6.85 கோடி வசூலித்துள்ளதாக அறியப்படுகிறது. படத்தின் அசல் பதிப்பான, தெலுங்கில், 2டி மற்றும் 3டியில், முறையே 19.67% மற்றும் 12.18% தியேட்டர் ஆக்கிரமிப்பு இருந்துள்ளது. படத்தை பொறுத்தவரை, சமந்தாவின் நடிப்பை பலரும் பாராட்டினாலும், சிலர் அவரின் நடிப்பிற்கு, படத்திற்கும் எதிர்மறை விமர்சனங்கள் கூறி வருகின்றனர். சமந்தா, தனக்கு இந்த படம், தனிப்பட்ட முறையில், மனதிற்கு மிகவும் நெருக்கமான படம் என கூறி இருந்த வேளையில், இதுபோன்ற எதிர்மறை விமர்சனங்கள் அவரை பாதித்துள்ளது என தெரிகிறது. அதற்கு உதாரணமாக, தன்னை பற்றியும், படத்தை பற்றியும் எதிர்மறை விமர்சனம் செய்த ட்விட்டர் பயனர் ஒருவரை சமந்தா ப்ளாக் செய்துவிட்டார்!