NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / துருவ நட்சத்திரம் படத்தின் இரண்டாவது பாடல் அடுத்த வாரம் வெளிவரும்: ஹாரிஸ் ஜெயராஜ் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    துருவ நட்சத்திரம் படத்தின் இரண்டாவது பாடல் அடுத்த வாரம் வெளிவரும்: ஹாரிஸ் ஜெயராஜ் 
    'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் அப்டேட் தந்தார் இசையமைப்பாளர் ஹாரிஸ்

    துருவ நட்சத்திரம் படத்தின் இரண்டாவது பாடல் அடுத்த வாரம் வெளிவரும்: ஹாரிஸ் ஜெயராஜ் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 11, 2023
    04:30 pm

    செய்தி முன்னோட்டம்

    'சீயான்' விக்ரம்- கவுதம் வாசுதேவ் மேனன் முதல்முறையாக இணையும் திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'.

    இந்த படம் சில ஆண்டுகளுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டு, படத்தின் முதல் பாடலும் வெளியான நிலையில், பல காரணங்களால் படம் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், சம்பள பாக்கி காரணமாக பின்னணி இசை கோர்வையை நிறுத்திவிட்டார் எனக்கூறப்பட்டது.

    நடிகர் விக்ரமும், சம்பள பிரச்னை காரணமாக டப்பிங் செய்யவில்லை எனவும் செய்திகள் வெளியாகின.

    இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர், பிரச்சனைகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டு, திரைப்படம் விரைவில் வளியாகும் என மகிழ்ச்சியாக தெரிவித்தார், இயக்குனர் கவுதம்.

    card 2

    வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்

    படத்தில் நிலவி வந்த சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்ததும், ஹாரிஸ் ஜெயராஜ், விறுவிறுவென படத்தின் இசைக்கோர்வை வேலைகளையும் முடித்ததாக அறிவித்தார்.

    தொடர்ந்து, அவர் மலேசியாவில் நடத்திய இசைநிகழ்ச்சியில், படத்தின் பாடல் வெளியீட்டு விழா குறித்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், இது குறித்து மௌனம் காத்துவந்தது படக்குழு.

    இந்நிலையில், கமல் நடித்த, 'வேட்டையாடு விளையாடு' திரைப்படம், ரீ-மாஸ்டர் செய்யப்பட்டு, ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.

    அந்த பதிப்பும் வெற்றிகரமாக ஓடிய நிலையில், அதை ஹாரிஸும், கவுதமும் கொண்டாடினர்.

    அப்போது நிருபர்களை சந்தித்து பேசிய ஹாரிஸ், படத்தின் இரண்டாவது பாடல் அடுத்த வாரம் வெளியாகும் என தெரிவித்தார்.

    இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன .

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விக்ரம்
    பாடல் வெளியீடு
    திரைப்பட வெளியீடு
    திரைப்பட அறிவிப்பு

    சமீபத்திய

    ஐபிஎல் கோப்பையுடன் ஆர்சிபி அணி பெங்களூரில் வெற்றி அணிவகுப்பை நடத்தவுள்ளது ஐபிஎல் 2025
    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளை தடுக்க வேண்டுகோள் வைத்த பாகிஸ்தான்; நிராகரித்த மலேஷியா மலேசியா
    பிரெஞ்சு ஓபன் 2025: தொடர்ந்து மூன்றாவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார் கார்லோஸ் அல்கராஸ்  டென்னிஸ்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    விக்ரம்

    2022-ல் தோல்வியை சந்தித்த டாப் ஹீரோக்களின் தமிழ்ப் படங்கள் தமிழ் திரைப்படங்கள்
    பொங்கல் விடுமுறையொட்டி சின்னத்திரைக்கு படையெடுக்கும் பொன்னியின் செல்வன் தமிழ் திரைப்படம்
    சுஹாசினி வெளியிட்ட பொன்னியின் செல்வன் படத்தின் காலண்டர் தமிழ் திரைப்படம்
    ப. ரஞ்சித்தின் தங்கலான் படத்திற்காக 4 மணி நேரம் மேக்கப் போடும் விக்ரம் பா ரஞ்சித்

    பாடல் வெளியீடு

    அஜித்தின் 'துணிவு' படத்தின் முதல் பாடல் 'சில்லா சில்லா' டிசம்பர் 9-ம் தேதி வெளியீடு அஜீத்
    ஏ. ஆர். ரகுமான் அடுத்த இசை நிகழ்ச்சிக்கான தகவல்கள் விரைவில் என அறிவித்துள்ளார். ஏஆர் ரஹ்மான்
    வெளியானது துணிவு படத்தின் இரண்டாவது பாடல் 'காசேதான் கடவுளடா' அஜீத்
    தனது திருமண வாழ்க்கையை குறித்து மனம் திறந்து பேசியுள்ள பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மி பாடகர்

    திரைப்பட வெளியீடு

    'பத்து தல' படத்தின் வெற்றிக்கு பாண்டிச்சேரி ரசிகர்கள் செய்த காரியம் திரைப்பட அறிவிப்பு
    இந்த வாரம், வெள்ளித்திரையிலும், OTT தளத்திலும் வெளியாக போகும் படங்கள் என்னென்ன? ஓடிடி
    19 திரையரங்குகளில் வெளியீடு: சிங்கப்பூரில் சாதனை படைத்த சிம்புவின் 'பத்து தல' திரைப்படம் திரையரங்குகள்
    ரோஹிணி தியேட்டர் விவகாரம்: இன்றும் தொடர்கிறதா தீண்டாமை கொடுமை?தியேட்டர் உரிமையாளர்கள் அளித்த விளக்கம் வைரல் செய்தி

    திரைப்பட அறிவிப்பு

    தள்ளிப்போகும் ஜவான் ரிலீஸ் தேதி; காரணம் இதுதானா? திரைப்பட வெளியீடு
    கமல் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம், பூஜையுடன் துவக்கம்  கமல்ஹாசன்
    வெங்கட் பிரபுவின் 'கஸ்டடி' ட்ரைலர் வெளியானது  கோலிவுட்
    பிரபாஸ் நடிக்கும் 'ஆதிபுருஷ்' படத்தின் ட்ரைலர் வெளியானது திரைப்பட வெளியீடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025