
திரிஷ்யம்: முதல்முறையாக ஒரு தென்னிந்திய திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படவுள்ளது
செய்தி முன்னோட்டம்
பிரபல மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கிய திரைப்படம் திரிஷ்யம்.
மோகன்லாலும், மீனாவும் நடித்துள்ள இந்த திரைப்படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த திரைப்படம் தற்போது ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படவுள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான திரிஷ்யம், 5 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டது. ஆனால், கிட்டத்தட்ட 72 கோடி வரை வசூலை பெற்றது.
தற்போது ஹாலிவுட்டில் கல்ஃப் ஸ்ட்ரீம் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் இப்படத்தை ரீமேக் செய்ய இருப்பதாகவும், இதன் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் முதல் இந்திய படம் இது என்ற பெருமையும் பெற்றுள்ளது திரிஷ்யம்.
ட்விட்டர் அஞ்சல்
திரிஷ்யம் ஹாலிவுட் ரீமேக்
@SecondShowTamil is it profitable? When #Dhrishyam movie is already available in OTT. https://t.co/PPyzq9IyNK
— . (@OhoMemes) February 29, 2024