Page Loader
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேர்த்திக்கடனை செலுத்திய நடிகர் தனுஷ்
கேப்டன் மில்லர் படத்திற்காக, வளர்ந்திருந்த நீண்ட தடியும், கூந்தலும் இல்லாமல், தற்போது ஒரு புதிய லுக்கில் இருக்கும் தனுஷின் புகைப்படம் வைரலாகி வருகிறது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேர்த்திக்கடனை செலுத்திய நடிகர் தனுஷ்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 03, 2023
12:27 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் தனுஷ், தற்போது கேப்டன் மில்லர் என்ற படத்தினை நடித்து முடித்துள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில், கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இவர்களுடன், முக்கிய வேடத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் மற்றும் தெலுங்கு ஹீரோ சந்தீப் கிஷன் ஆகியோரும் நடிக்கின்றனர். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்காக நீண்ட நாட்களாக நெடிய கூந்தலுடன் வலம் வந்தார் தனுஷ். தற்போது அந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த வேளையில், திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்து, மொட்டை அடித்து, தனது நேர்த்திக்கடனை முடித்துள்ளார் தனுஷ். இவருடன், இவரின் மகன்களான யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோரும் மொட்டை அடித்து வேண்டுதலை நிறைவேற்றி உள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்த தனுஷ்