அனுஷ்கா ஷெட்டி படத்திற்காக "என்னடா நடக்குது" என்ற பாடலை பாடியுள்ள தனுஷ்
செய்தி முன்னோட்டம்
இந்திய சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது கம் பேக் கொடுத்து இருக்கும் நடிகை அனுஷ்கா, 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு என தென்னிந்தியா மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தை இயக்கி இருப்பது, தெலுங்கு இயக்குனர் மகேஷ் பாபு.P.
'ஜதி ரத்னாலு' என்ற தெலுங்கு படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகர் நவீன் பொலிஷெட்டி கதாநாயகனாக நடிக்கிறார். படத்திற்கு இசை, ரதன்.
சில வாரங்களுக்கு முன்னர் படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் எதிர்பார்ப்பை கூட்டியது.
இந்நிலையில், ரசிகர்களை சர்ப்ரிஸ் செய்யும் விதமாக, படத்தில் ஒரு பாடலை தனுஷை வைத்து பாட வைத்துள்ளனர்.
Dhanush Song in Anushka's Flim
மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி
இதற்கு முன்னதாக 2012ல், தனுஷ் - அனுஷ்கா இணைந்து, 'சச்சின் ANTHEM' என்ற பாடலை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு இசையமைத்தது அனிருத்.
அதற்கு பிறகு தற்போது, 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' திரைப்படத்திற்காக இருவரும் மீண்டும் இணைவது அறிந்ததும், அவர்களது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
'என்னடா நடக்குது' என துவங்கும் இந்த பாடலின் வரிகள், அனைவரின் மனதைக் கவரும் வகையில் அமைந்திருக்கிறது.
இந்த பாடலின் lyrical வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
தனுஷ் குரலில் வெளிவரும் இந்த பாடல் மக்களிடையே அதிகம் வைரலாகும் எனவும் படக்குழுவால் எதிர்பார்க்கப்படுகிறது.