
'மாமன்னன் ஒரு உணர்ச்சிகரமான திரைப்படம்': தனுஷ் புகழாரம்
செய்தி முன்னோட்டம்
உதயநிதி ஸ்டாலின், வடிவேலு ஆகியோர் நடித்த மாமன்னன் திரைப்படம் நாளை(ஜூன் 29) வெளியாக இருக்கிறது.
பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இந்த படத்தையும் இயக்கி இருக்கிறார்.
நாளை இத்திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், நடிகர் தனுஷ், "மாரி செல்வராஜின் மாமன்னன் ஒரு உணர்ச்சிகரமான திடைப்படம். வடிவேலு சார் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மிகவும் உறுதியான நடிப்பை வழங்கியுள்ளனர். ஃபஹத் மற்றும் கீர்த்தியும் சிறப்பாக நடித்துள்ளனர். இடைவேளையின் போது தியேட்டரே அதிர போகிறது. ஏ.ஆர்.ரகுமான் சார், அருமை!" என்று ட்விட்டரில் புகழ்ந்துள்ளார்.
இதற்கு பதிலளித்திருக்கும் உதயநிதி ஸ்டாலின், "தனுஷ் அனைத்திற்கும் நன்றி. உங்கள் ஆதரவு இல்லாமல் மாமன்னன் நடந்திருக்காது" என்று கூறியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
தனுஷுக்கு நன்றி தெரிவித்தார் உதயநிதி ஸ்டாலின்
🙏🏼 Dhanush .. thx for everything .. without your support #MAAMANNAN wouldn’t have happened https://t.co/R6IFkTyjVl
— Udhay (@Udhaystalin) June 28, 2023