NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / '96 பட பாணியில் ரீயூனியன் செய்து மகிழ்ந்த தனுஷ் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    '96 பட பாணியில் ரீயூனியன் செய்து மகிழ்ந்த தனுஷ் 
    பள்ளி தோழர்களுடன் ஒரு ரீயூனியன் செய்து மகிழ்ந்த தனுஷ்

    '96 பட பாணியில் ரீயூனியன் செய்து மகிழ்ந்த தனுஷ் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 14, 2023
    07:34 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் தனுஷ், தன்னுடைய இளமை காலங்களை, சென்னை கோடம்பாக்கத்தில், சாலிகிராமத்தில் கழித்ததாக கூறுவார்.

    கல்லூரி படிப்பை தொடங்கும் முன்னரே, நடிக்க வந்துவிட்டார் தனுஷ். 'துள்ளவதோ இளமை' படத்தின் மூலமாக அறிமுகமான அவர், தொடர்ச்சியாக வந்த எதிர்மறை விமர்சனங்கள் அனைத்தையும், ஏணிகளாக மாற்றிக்கொண்டு, தற்போது தேசிய விருதுகளை குவிக்கும், ஹாலிவுட் இயக்குனர்களால் தேடப்படும் நடிகராக அசுர வளர்ச்சி அடைந்துள்ளார்.

    நிற்க நேரமில்லாமல், தொடர்ச்சியாக படங்களில் கமிட் ஆகி வரும் தனுஷ், தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ளார்.

    தொடர்ந்து, அவரே இயக்கப்போகும் ஒரு திரைப்படம், பாலிவுட் திரைப்படம், வடசென்னை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 என வரிசையாக படங்கள் அவர் கைவசம் உள்ளன.

    card 2

    பள்ளி ரீ யூனியனில் கலந்துகொண்ட தனுஷ் 

    இந்நிலையில், தன்னுடைய பள்ளி தோழர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு கெட்-டுகெதர் ஏற்பாடு செய்துள்ளார் தனுஷ்.

    '96 படப்பாணியில் நடைபெற்ற இந்த ரீ யூனியன், சென்னையிலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றதாகவும், இந்த ரீ யூனியனில் அவருடன் பள்ளியில் படித்த பலர் கலந்து கொண்டனர் எனவும் கூறப்படுகிறது.

    இந்த விழாவை தனுஷே மேற்பார்வையிட்டு நடத்தியதாக செய்திகள் கூறுகின்றன.

    அந்த ரீயூனியனில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது, இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த சந்திப்பின் போது தன்னுடைய பள்ளிப்பருவ நினைவுகளை நண்பர்களோடு பகிர்ந்து மகிழ்ந்துள்ளார் தனுஷ்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தனுஷ்
    வைரல் செய்தி
    வைரலான ட்வீட்

    சமீபத்திய

    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்
    உலக சுகாதார நிறுவனம் முதன்முதலில் தொற்றுநோய் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்கிறது- அதன் அர்த்தம்? தொற்று நோய்

    தனுஷ்

    பேட்டிகளை தவிர்க்கும் முன்னணி கதாநாயகர்கள் பற்றி ஒரு சிறு பார்வை கோலிவுட்
    இடஒதுக்கீடு பற்றி கருத்து தெரிவித்த 'வாத்தி' இயக்குநர்: சர்ச்சையாகும் பேச்சு கோலிவுட்
    போயஸ் கார்டனில், தான் கட்டியுள்ள புது வீட்டிற்கு, பெற்றோர்கள் தலைமையில் பால்காய்ச்சிய தனுஷ் வைரல் செய்தி
    மகன்களுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் வைரல் செய்தி

    வைரல் செய்தி

    'ஐபிஎல் பார்க்குறதெல்லாம் வேஸ்ட்' என ட்விட்டரில் பதிவிட்ட நபரை வறுத்தெடுக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்! ஐபிஎல்
    மனைவியுடன் ருதுராஜ் கெய்க்வாட்..! வைரலாகும் திருமண புகைப்படங்கள்! கிரிக்கெட்
    'பாண்டியம்மா' இந்திரஜா 'ரோபோ' ஷங்கருக்கு திருமணம்! விஜய்
    ஆதிபுருஷ் வெளியாகும் திரையரங்குகளில், ஹனுமானுக்கு ஒரு சீட்! தயாரிப்பாளர்களின் வினோத அறிவிப்பு  திரைப்பட அறிவிப்பு

    வைரலான ட்வீட்

    உடல் நலம் தேறி வருவதாக பாடகி பாம்பே ஜெயஸ்ரீ ட்வீட் பாடகர்
    ஹெல்மெட் இல்லாமல் பைக்கில் பயணித்த பாலிவுட் நடிகர்கள்; போலீஸ் கேஸ் பாயுமா? பாலிவுட்
    நடிகை கீர்த்தி சுரேஷின் காதலர் இவரா? வைரலாகும் புகைப்படம்  கோலிவுட்
    லைகா நிறுவனத்தில் ரெய்டு: அன்றே கணித்த ரா.பார்த்திபன்  லைகா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025