
OTTயில் ஜூனியர் NTR நடித்த 'தேவரா': எப்போது, எங்கே பார்க்கலாம்
செய்தி முன்னோட்டம்
ஜூனியர் என்டிஆர், சைஃப் அலி கான் மற்றும் ஜான்வி கபூர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்த தேவாரா: பகுதி 1 திரைப்படம் நெட்ஃபிலிக்ஸ்-இல் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.
கொரட்டாலா சிவா இயக்கிய இப்படம் கடந்த செப்டம்பர் 27 அன்று திரையரங்குகளில் வெளியாகி அதன் பிரம்மாண்டம் தயாரிப்பு மற்றும் VFX காட்சிகளுக்காக கவனத்தை ஈர்த்தது.
எல்லா மொழிகளிலும் சேர்த்து பாக்ஸ் ஆபிஸில் சராசரியாக ₹290 கோடிக்கு மேல் வசூலித்ததுள்ளது இந்த தேவாரா: பகுதி 1.
ஸ்ட்ரீமிங் விவரங்கள்
Netflixல் பல மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகவுள்ள 'தேவாரா'
தேவாரா பாகம் 1 இன் டிஜிட்டல் உரிமையை Netflix பெற்றுள்ளது மற்றும் நவம்பர் 8ஆம் தேதி ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கும்.
இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது.
RRRக்குப் பிறகு என்டிஆர் நடித்த படம் இதுவாகும். அந்த படத்தில் அவர் ராம் சரணுடன் இணைந்து நடித்திருந்தார்.
RRR படத்தில் ஜூனியர் NTR-இன் நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை. RRR படத்தில் இடப்பெற்றிருந்த நாட்டுக்கூத்து பாடல் அவரை உலக அரங்கில் பிரபலமடைய செய்தது.