Page Loader
தேசிங்கு ராஜா-2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

தேசிங்கு ராஜா-2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

எழுதியவர் Sindhuja SM
Jan 28, 2024
08:21 pm

செய்தி முன்னோட்டம்

கோலிவுட்: தேசிங்கு ராஜா-2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் எழில் கடந்த 2013ஆம் ஆண்டில் தேசிங்கு ராஜா என்று படத்தை இயக்கி இருந்தார். காமெடி திரைப்படமாக வெளியாகி இருந்த இப்படத்தில் விமல் மற்றும் பிந்து மாதவி ஆகியோர் நடித்திருந்தனர். இந்நிலையில், இயக்குநர் எழில் அப்படத்தின் 2ஆம் பாகத்தை இயக்கி வருகிறார். அதில் விமல் ஹீரோவாக நடித்து வருகிறார். அவரை தவிர, இரண்டாவது முக்கிய கதாபாத்திரத்தில் ஜனா நடிக்கிறார். ராம் சரணின் 'ரங்கஸ்தலம்' என்ற தெலுங்கு படத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகை பூஜிதா பொன்னாடா மற்றும் தெலுங்கு நடிகை ஹர்ஷிதா ஆகியோர் இப்படத்தின் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

தேசிங்கு ராஜா-2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்