Loading...
7 மாத கர்ப்பத்திலும் அட்லீ - அல்லு அர்ஜுனின் 'ராகா' படத்தில் அதிரடி சண்டைக்காட்சிகளில் நடிக்கும் தீபிகா படுகோன்
'ராகா' படத்தில் அதிரடி சண்டைக்காட்சிகளில் நடிக்கும் தீபிகா படுகோன்

7 மாத கர்ப்பத்திலும் அட்லீ - அல்லு அர்ஜுனின் 'ராகா' படத்தில் அதிரடி சண்டைக்காட்சிகளில் நடிக்கும் தீபிகா படுகோன்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 17, 2026
07:15 pm

செய்தி முன்னோட்டம்

பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான தீபிகா படுகோன், தற்போது தனது இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து 7 மாத கர்ப்பமாக இருக்கும் நிலையிலும், அட்லீ- அல்லு அர்ஜுனின் இயக்கும் 'ராகா' திரைப்படத்தின் சண்டைக்காட்சிகளில் நடித்து ஒட்டுமொத்த படக்குழுவையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். தன் மகப்பேறு விடுமுறைக்கு செல்வதற்கு முன்பாக, இந்த பிரம்மாண்ட படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொடுக்க வேண்டும் என்பதில் அவர் காட்டும் அர்ப்பணிப்பு மற்றும் தொழில் பக்திக்கு திரையுலகினர் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.

சண்டைக் காட்சிகள்

கர்ப்ப காலத்திலும் சளைக்காத சண்டைக் காட்சிகள்

'ராகா' திரைப்படம் என்பது மிகப்பெரிய பட்ஜெட்டில், அதிநவீன விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் பிரம்மாண்ட சண்டைக்காட்சிகளுடன் உருவாகும் ஒரு சயின்ஸ்-ஃபிக்ஷன் பேண்டஸி ஆக்ஷன் படமாகும்.

இத்தகைய கடினமான படத்தில், இரவு நேரப் படப்பிடிப்புகள் உட்பட தினசரி ஷூட்டிங்கில் தீபிகா படுகோன் பங்கேற்று வருகிறார்.

கர்ப்பமாக இருப்பதால் அவரது காட்சிகள் குறைக்கப்படலாம் என்று பரவிய வதந்திகளைப் படக்குழு ஏற்கனவே மறுத்திருந்தது.

அதற்கு ஏற்றாற்போல், தற்போது மருத்துவர்களின் தகுந்த ஆலோசனைகள் மற்றும் பலத்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுடன், சவாலான பல ஸ்டண்ட் காட்சிகளை அவரே முன்னின்று நடித்துக் கொடுத்து வருகிறார்.

சர்ச்சை

8 மணி நேர வேலை சர்ச்சை

சமீபத்தில் சினிமாத்துறையில் நடிகர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு முறையான 8 மணி நேர வேலை நேரம் இருக்க வேண்டும் என்று தீபிகா குரல் எழுப்பியிருந்தார்.

"பெண்களாக நின்று இதைக் கேட்கும்போது பலருக்கு அது பிடிவாதமாகத் தோன்றலாம், ஆனால் பல முன்னணி ஆண் நடிகர்கள் பல வருடங்களாக 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள், அது செய்தியாவதில்லை" என்று அவர் வெளிப்படையாகப் பேசியிருந்தார்.

திரையுலகின் வேலை கலாச்சாரத்தில் சீர்திருத்தம் கோரினாலும், தனது தற்போதைய படத்தின் தயாரிப்பாளர்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதற்காக அவர் இரவும் பகலும் உழைத்து வருகிறார்.

ADVERTISEMENT

விவரங்கள்

'ராகா' படம் பற்றிய சுவாரசிய தகவல்கள்

'புஷ்பா' படத்திற்குப் பிறகு அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா இணையும் இந்த படத்தில் ஜான்வி கபூர் மற்றும் மிருணாள் தாக்கூர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த பான்-இந்தியா படத்தின் விநியோக உரிமையைப் பெற தற்போதே உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களின் முன்னணி விநியோகஸ்தர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்தத் திரைப்படம் 2027 ஆம் ஆண்டு திரைக்கு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

ADVERTISEMENT