
அட்லீ- அல்லு அர்ஜுன் படத்தில் இணையும் தீபிகா படுகோன்!
செய்தி முன்னோட்டம்
'கல்கி 2898 AD' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனுடன் அட்லீ இயக்கும் புதிய மெகா ப்ராஜெக்ட்டில் முதன்மை கதாநாயகியாக இணைகிறார்.
PeepingMoon வெளியிட்டுள்ள செய்தியின்படி, 700 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்த அதிரடி திரைப்படத்தின் மூலம், 'ஜவான்' படத்துக்குப் பிறகு அட்லீ மற்றும் தீபிகா இரண்டாவது முறையாக கூட்டணி அமைக்கின்றனர்.
ஏற்கனவே மிருணாள் தாக்கூர் மற்றும் ஜான்வி கபூர் ஆகியோர் இப்படத்தில் கதாநாயகிகளாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவுக்கான தேர்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
விவரங்கள்
முதல்முறையாக இரட்டை வேடத்தில் அல்லு அர்ஜுன்
'AA22xA6' என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படம், ஃபேண்டஸி கலந்த ஒரு ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் என செய்திகள் கூறுகின்றன.
இதில் அல்லு அர்ஜுன் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.
அதேபோல, தீபிகா- அல்லு அர்ஜுன் கெமிஸ்டரியை காண ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ப தீபிகா தனித்துவமான தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும், அதற்காக அவர் மிக உயர்ந்த கட்டணத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தீபிகா சமீபத்தில் சந்தீப் ரெட்டி வாங்கா மற்றும் பிரபாஸின் 'ஸ்பிரிட்' படத்திலிருந்து வெளியேறியதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அவர் அட்லீ உடன் இணைகிறார்.
இப்படத்தினை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
லாஸ் ஏஞ்சல்ஸ் அடிப்படையிலான முன்னணி VFX நிறுவனங்கள் இதற்காக ஒப்பந்தமாகியுள்ளன.