Page Loader
ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் கௌவரத்தைப் பெறும் முதல் இந்திய நடிகை ஆனார் தீபிகா படுகோன்
ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேமைப் பெறும் முதல் இந்திய நடிகை தீபிகா படுகோன்

ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் கௌவரத்தைப் பெறும் முதல் இந்திய நடிகை ஆனார் தீபிகா படுகோன்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 03, 2025
08:21 am

செய்தி முன்னோட்டம்

இந்திய சினிமாவின் ஒரு வரலாற்று தருணத்தில், 2026 ஆம் ஆண்டில் ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் கௌரவத்தைப் பெற்றவர்களில் தீபிகா படுகோனும் இடம் பெற்றுள்ளார். இதன் மூலம், மோஷன் பிக்சர் பிரிவில் இந்த மதிப்புமிக்க அங்கீகாரத்தைப் பெற்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஹாலிவுட் வர்த்தக சபை புதன்கிழமை (ஜூலை 2) இரவு இந்த பட்டியலில் தீபிகா படுகோன் உள்ளிட்ட புதிதாக சேர்க்கப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட்டது. பொழுதுபோக்கு மற்றும் கலாச்சாரத்தில் தீபிகா படுகோனின் தாக்கத்தைக் கொண்டாடும் வகையில் அவர் இதில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தீபிகா படுகோன்

தீபிகா படுகோனுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரங்கள்

2018 ஆம் ஆண்டில் டைம் பத்திரிகையின் 100 செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில் இடம்பெற்று TIME100 இம்பாக்ட் விருதைப் பெற்ற தீபிகா படுகோன், உலகளவில் பல்வேறு சிறப்புகளை பெற்று வருகிறார். அதன் பின்னர் ஃபிஃபா உலகக்கோப்பை கோப்பையை வெளியிட்ட முதல் இந்தியராக அவர் வரலாறு படைத்தார். மேலும் லூயிஸ் உய்ட்டன் மற்றும் கார்டியர் ஆகிய ஆடம்பர பிராண்டுகளுக்கான உலகளாவிய தூதராக கையெழுத்திட்ட ஒரே இந்தியராகவும் இருக்கிறார். கேன்ஸ் ஜூரி உறுப்பினராக அவரது பங்கு உலகளாவிய சினிமாவில் அவரது செல்வாக்கை மேலும் உறுதிப்படுத்துகிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்த தீபிகா படுகோனுக்கு துவா படுகோன் சிங் என்ற ஒரு மகள் உள்ளார்.