Page Loader
பிரபல தொகுப்பாளினி DD, விஜய் டிவியை விட்டு விலகிய காரணத்தை கூறினார்
விஜய் டிவியில் இருந்து வெளியேறியதற்கு காரணம் என்ன? மனம் திறந்த டிடி

பிரபல தொகுப்பாளினி DD, விஜய் டிவியை விட்டு விலகிய காரணத்தை கூறினார்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 18, 2023
03:23 pm

செய்தி முன்னோட்டம்

சின்னத்திரையில் பல ஆண்டுகளாக பிரபலமாக இருக்கும் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, சுருக்கமாக DD. விஜய் டிவி தொடங்கப்பட்ட காலத்திலிருந்து, அதில் பயணப்பட்டவர். அதுமட்டுமின்றி பல மேடை நிகழ்ச்சிகளையும் அவர் தொகுத்து வழங்கியுள்ளார். குறிப்பாக, பிரபலங்களுடன் கலந்துரையாடும், 'காபி வித் DD' சின்னத்திரையில் மிகவும் ஃபேமஸ். அவரின் அக்கா தேவதர்ஷினியும், சன் டிவியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், திவ்யதர்ஷினி தன்னுடைய நெருங்கிய நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை, கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக, திருமணமான மூன்று வருடங்களிலேயே அவர்கள் பிரிந்து விட்டனர்.

card 2

விஜய் டிவியில் இருந்து விலகிய டிடி

இதனைத்தொடர்ந்து தனது தொழில் கவனம் செலுத்தி வந்த டி டி, மெதுவாக அதிலிருந்து விலக தொடங்கினார். அதன்பின்னர், ஓரிரு மேடை நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்கிய DD, விஜய் டிவியிலிருந்து முழுவதுமாக விலகி விட்டார் என்ற செய்தி வெளியானது. அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த செய்தியின் பின்னாலிருந்த உண்மையான காரணத்தை சமீபத்தில் அவர் பகிர்ந்துகொண்டார். "ரியாலிட்டி ஷோ ஷூட்டிங் என்றாலே பல மணிநேரம் நடக்கும். அதனால் நிறைய நேரம் தொகுப்பாளர்கள் நிற்க வேண்டிய நிலை இருக்கும். ஒருகட்டத்தில் எனக்கு காலில் பிரச்சனை ஏற்பட்டு மணிக்கணக்கில் நிற்க முடியாத சூழல் உருவானது. இதனால் எனக்கு வாய்ப்புகளும் குறையத் தொடங்கின. பின்னர் தான் நான் விஜய் டிவியை விட்டு விலகிவிட்டேன்" என கூறி இருக்கிறார்.