
புதுப்பட அறிவிப்புடன் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறிய சந்தானம்
செய்தி முன்னோட்டம்
கோலிவுட்டில் பேய் படத்திற்கு இன்னும் மவுசு இருக்கிறது போலும்.
நடிகர் சந்தானம் மற்றும் சுரபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும், புதிய திரைப்படத்தின் தலைப்பு, 'டிடி ரிட்டர்ன்ஸ்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவும் ஒரு காமெடி பேய் படம்.
இன்று தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறிக்கொண்டு தனது புதிய படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு, நடிகர் சந்தானம் ட்வீட் செய்துள்ளார்.
இந்த படத்தை, பிரேம் ஆனந்த் இயக்க, சி ரமேஷ் குமார் தயாரிக்கிறார்.
பிரென்ச் வாய்ஸ்ஓவர் உடன், தொடங்கிய அந்த மோஷன்போஸ்டர், "நீங்கள் பங்கேற்காவிட்டாலும், விளையாட வேண்டிய பல வீரர்களுடன், வாழ்க்கை எப்படி விளையாடுகிறது!" என தொடங்குகிறது.
இந்த படத்தில், சந்தனத்துடன், ரெடின் கிங்ஸ்லி, மாறன், ஃபெசி விஜயன், ராஜேந்திரன், முனிஷ்காந்த், ஆகியோரும் நடித்துள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
DD Returns!
#DDReturns
— Santhanam (@iamsanthanam) April 14, 2023
🔗 https://t.co/Pz7GHOzNl1
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!😊🥳
@iampremanand @RKEntrtainment @Surbhiactress @dopdeepakpadhy @ofrooooo @dineshashok_13 @onlynikil @thinkmusicindia pic.twitter.com/ZdkGwjt4s8