யோகி பாபுவுக்கு கிரிக்கெட் மட்டையை பரிசாக வழங்கினார் எம்எஸ் தோனி
கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, திரைப்பட தயாரிப்பில் இறங்கியதை அறிந்திருப்பீர்கள். அவரது முதல் தயாரிப்பு, ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகும், 'லெட்ஸ் கெட் மேரீட்' என்ற திரைப்படம். இந்த படத்தில், லவ் டுடே படப்புகழ் இவானா ஜோடியாக நடிக்கிறார். மேலும், யோகி பாபு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில், யோகி பாபுவுக்கு தான் கையெழுத்திட்ட கிரிக்கெட் மட்டையை பரிசளித்துள்ளார். அந்த மட்டையுடன் தான் இருக்கும் புகைப்படத்தை, யோகி பாபு தனது சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியோடு பதிவிட்டிருந்தார். யோகி பாபு ஒரு விளையாட்டு வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் பேட் பரிசளித்ததற்கு நன்றி தெரிவித்து யோகி பாபு, ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அது இப்போது வைரல் ஆகி வருகிறது.