வைரலான 'ஜெய் மாதா தி' வீடியோவால் ரன்பீர் கபூருக்கு சிக்கல்
பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரன்பிர் கபூர் குடும்பத்தின் வருடாந்திர கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது. அதில் ஒரு நபர் கேக்கில் மதுவை ஊற்றுவதை போலவும், அப்போது, 'ஜெய் மாதா தி' என்று கோஷமிட்டு கொண்டே, நடிகர் ரன்பிர் கபூர் அதை பற்றவைப்பதை போலவும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, சஞ்சய் திவாரி என்பவர் கபூர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காட்கோபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இருப்பினும், இந்த விவகாரத்தில் இன்னும் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது.