Page Loader
மத உணர்வுகளை புண்படுத்திய குற்றத்துக்காக, நடிகை டாப்ஸி மீது புகார்
நடிகை டாப்ஸி மீது ப.ஜ.கா நிர்வாகி புகார்!

மத உணர்வுகளை புண்படுத்திய குற்றத்துக்காக, நடிகை டாப்ஸி மீது புகார்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 29, 2023
09:50 am

செய்தி முன்னோட்டம்

'ஆடுகளம்' படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகம் ஆனவர் நடிகை டாப்ஸி. அதன் பிறகு, ஒன்றிரண்டு படங்கள் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்தவர், தற்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து நடித்து வரும் டாப்ஸி, சமீபத்தில், ஒரு பேஷன் ஷோவில், பிரபல ஆடை வடிவமைப்பாளர்களின் உடைகளை அணிந்து ராம்ப் வாக் செய்தார். அப்போது அவர் கவர்ச்சிகரமான உடை அணிந்து, அதனுடன் ஒரு ஹிந்து கடவுளின் முகம் பதிக்கப்பட்ட நெக்லஸ் அணிந்திருந்தார். அது பலத்த கண்டனங்களை ஈர்த்தது. இதனை தொடர்ந்து அவர் மீது, மத உணர்வுகளை புண்படுத்திய குற்றத்துக்காக, இந்தூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரை அளித்தது, உள்ளூர் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் மகன் ஆவார்.

ட்விட்டர் அஞ்சல்

டாப்ஸி மீது புகார்

ட்விட்டர் அஞ்சல்

ஒய்யாரமாக நடக்கும் டாப்ஸி