அன்று 'தல' தோனி, இன்று ரிஷப் பண்ட்.. கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் சூப்பர்ஸ்டார்
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஜினிகாந்தின் கபாலி தோற்றத்தை பிரதிபலிக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். அதற்கு கேப்ஷனாக 'தலைவா' என குறிப்பிட்டது மட்டுமின்றி, பேட்ட படத்தின் தீம் மியூசிக்-ஐ பின்னணியில் சேர்த்து பதிவிட்டிருந்தார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பலரின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் ரஜினியின் ஸ்டைலை பின்பற்றுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னதாக எம்.எஸ்.தோனியும் கபாலி படத்திலிருந்து ஒரு போஸை பிரதிபலித்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். தற்போது அதுவும் வைரலாகி வருகிறது.