LOADING...
நேட்டோ ஒரு காகிதப் புலி! ஈரான் போரில் ஆதரவளிக்காததால் நட்பு நாடுகள் மீது டிரம்ப் காட்டம்
நேட்டோ ஒரு காகிதப் புலி என டொனால்ட் டிரம்ப் காட்டம்

நேட்டோ ஒரு காகிதப் புலி! ஈரான் போரில் ஆதரவளிக்காததால் நட்பு நாடுகள் மீது டிரம்ப் காட்டம்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 21, 2026
07:49 am

செய்தி முன்னோட்டம்

ஈரான் உடனான மோதலில் தமக்கு போதிய ராணுவ ஒத்துழைப்பு வழங்காத நேட்டோ நட்பு நாடுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கோழைகள் என்றும் காகிதப் புலி என்றும் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க நேட்டோ நாடுகள் தயக்கம் காட்டுவதே டிரம்பின் இந்த ஆத்திரத்திற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

பூஜ்ஜியம்

அமெரிக்கா இல்லையென்றால் நேட்டோ பூஜ்ஜியம்

தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், அமெரிக்காவின் ஆதரவு இல்லையென்றால் நேட்டோ ஒரு வலுவற்ற அமைப்பு என்று சாடியுள்ளார். "அணுசக்தி கொண்ட ஈரானைத் தடுக்கும் போராட்டத்தில் இணைய அவர்கள் விரும்பவில்லை. இப்போது போர் ராணுவ ரீதியாக வெல்லப்பட்டு, அவர்களுக்கு ஆபத்து குறைந்த நிலையில், எண்ணெய் விலை உயர்வைப் பற்றி மட்டும் குறை கூறுகிறார்கள். ஆனால் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க உதவி செய்ய மறுக்கிறார்கள்." என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தி

உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடி

சர்வதேச எண்ணெய் போக்குவரத்தில் மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியைத் திறப்பது ஒரு எளிய ராணுவ நடவடிக்கைதான் என்று டிரம்ப் கருதுகிறார். ஆனால், பிப்ரவரி 28 அன்று தொடங்கிய அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனைச் சரிசெய்ய நேட்டோ நாடுகள் முன்வர வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்துகிறார். "மிகக் குறைந்த ஆபத்து உள்ள இந்த வேலையைச் செய்ய நேட்டோ மறுப்பது கோழைத்தனம், இதனை நாங்கள் நினைவில் கொள்வோம்." என்று அவர் எச்சரித்துள்ளார்.

Advertisement

நிலைப்பாடு

ஐரோப்பிய நாடுகளின் நிலைப்பாடு என்ன?

ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகள் ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய பொருத்தமான முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறியுள்ளன. இருப்பினும், நேரடி ராணுவத் தலையீட்டில் இவர்களுக்கு உடன்பாடில்லை. போரின் தீவிரத் தன்மை குறைந்தால் மட்டுமே இதில் ஈடுபட முடியும் என ஜெர்மன் அதிபர் ஃப்ரெடெரிக் மெர்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச சட்டங்களைப் பின்பற்றுவதும், போரைத் தணிப்பதுமே தற்போதைய முன்னுரிமை என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

Advertisement

தாக்கம்

போரின் தாக்கம்

கடந்த சில வாரங்களாக நீடித்து வரும் இந்த மோதலால் சர்வதேச சந்தை நிலைகுலைந்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதோடு, உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. போரைத் தணிக்க ஐரோப்பிய நாடுகள் விரும்பும் நிலையில், அமெரிக்கா தனது நட்பு நாடுகளிடம் இருந்து தீவிரமான ராணுவப் பங்களிப்பை எதிர்பார்ப்பது சர்வதேச அரசியலில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement