
திடீரென சென்னைக்கு திரும்பிய லியோ படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா
செய்தி முன்னோட்டம்
'லியோ' படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரஹம்சாவின் தாயார், திடீரென காலமானதால், அவர் சென்னை விரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லியோ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு, தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா.
இவர் 'ஈரம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார்.
ஒளிப்பதிவாளர் சரவணனின் சீடரான மனோஜ், நண்பன், விண்ணைத்தாண்டி வருவாயா, ராதே ஷியாம், பீஸ்ட் போன்ற வெற்றி படங்களின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
இவரின் தந்தை, U.V. பாபு. இவர் தெலுங்கில் பல வெற்றி படங்களை தந்த தயாரிப்பாளர்.
இந்நிலையில், மனோஜின் தாயார், உடல்நலமில்லாமல், காலமானதாக தகவல் வரவே, காஷ்மீரிலிருந்து, சென்னைக்கு விரைந்துள்ளார் மனோஜ் பரமஹம்சா.
ட்விட்டர் அஞ்சல்
மனோஜ் பரமஹம்சாவின் தாயார் திடீர் மறைவு
திடீரென நிகழ்ந்த மரணம்... காஷ்மீரில் நடந்து வந்த லியோ படத்தின் ஷூட்டிங் நிறுத்தம்...! #Leo #manojparamahamsa #ThalapathyVijay #LokeshKanagaraj
— Asianetnews Tamil (@AsianetNewsTM) February 20, 2023
https://t.co/PwhD4oVGVd