Page Loader
'வேதாளம்' ரீமேக்கில் நடிக்கும் சிரஞ்சீவி; இணையத்தை கலக்கும் அவரின் புதிய கெட்டப்
'வேதாளம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் சிரஞ்சீவி

'வேதாளம்' ரீமேக்கில் நடிக்கும் சிரஞ்சீவி; இணையத்தை கலக்கும் அவரின் புதிய கெட்டப்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 18, 2023
02:21 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் அஜித் நடிப்பில், கடந்த 2015-ம் ஆண்டில் வெளியான 'வேதாளம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ளார் நடிகர் சிரஞ்சீவி. அந்த படத்தில், அவர் ஏற்றுள்ள வித்தியாசமான கெட்டப், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. 'போலோ ஷங்கர்' (Bholo shankar ) என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. அஜித்தின் தங்கையாக நடித்த லட்சுமி மேனனின் கதாபாத்திரத்தில், கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். வேதாளம் படத்தில், அஜித் ஓட்ட வெட்டிய தலை முடியுடன் வந்ததை போல, இப்படத்தில் சிரஞ்சீவி மொட்டை தலையுடன் வர போகிறார் என்றும், அவரது புதிய கெட்டப் தற்போது வைரலாகி உள்ளது. இந்த படத்தை மெஹர் ரமேஷ் இயக்குகிறார்.

ட்விட்டர் அஞ்சல்

சிரஞ்சீவியின் புதிய கெட்டப்