
பிச்சைக்காரன் 2 படத்தை வெளியிட அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம்!
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி நடித்துள்ளார்.
இந்த படம் ஏற்கனவே ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், படத்தின் கதை ஆய்வுக்கூடம் படத்தில் இருந்து திருடப்பட்டதாக மாங்காடு மூவிஸ் உரிமையாளர் ராஜகணபதி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதனால், விஜய் ஆண்டனி படம் வெளியாவதை தடுக்கும் நோக்கில் மனு தாக்கல் செய்துள்ளார்கள் எனவும் படம் தள்ளிப்போனால் நஷ்டம் ஏற்படும் என பதில் மனு அளித்திருந்தார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றம் படத்தை வெளியிட அனுமதி அளித்துள்ளது. மேலும் படத்திற்கு கிடைக்கும் வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய விஜய் ஆண்டனிக்கு உத்தரவிட்டுள்ளனர். பிச்சைக்காரன் 2 படம் மே 19 ஆம் தேதி வெளியாகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JustIn | 'பிச்சைக்காரன் 2' படத்தை வெளியிட அனுமதி!#SunNews | #Pichaikkaran2 | @vijayantony | #MadrasHC pic.twitter.com/6nccJ4KlZy
— Sun News (@sunnewstamil) May 5, 2023