Page Loader
சந்திரமுகி-2 படத்தின் வேட்டையன் 'லுக்' வெளியிடப்படும் தேதி அறிவிப்பு 
இந்தாண்டு விநாயகர் சதுர்த்திக்கு 'சந்திரமுகி 2 ' வெளியாகிறது

சந்திரமுகி-2 படத்தின் வேட்டையன் 'லுக்' வெளியிடப்படும் தேதி அறிவிப்பு 

எழுதியவர் Sindhuja SM
Jul 30, 2023
02:10 pm

செய்தி முன்னோட்டம்

ரஜினிகாந்த்-பிரபு- ஜோதிகா நடிப்பில் 17 ஆண்டுகள் முன்னர் வெளியாகி மக்களின் மனதை கவர்ந்த திரைப்படம் 'சந்திரமுகி'. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது நடிகர்கள் ராகவா லாரன்ஸ், கங்கனா, வடிவேலு ஆகியோர் நடிப்பில் தயராகி கொண்டிருக்கிறது. லைகா புரடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு, ஆஸ்கர் வென்ற எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். சமீபத்தில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், வேட்டையன் கதாபாத்திரம் திரும்பி நிற்பது போன்ற ஒரு போஸ்டரை இன்று வெளியிட்ட லைக்கா புரடக்ஷன், நாளை காலை 10 மணிக்கு வேட்டையன் 'லுக்' வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும், இந்தாண்டு விநாயகர் சதுர்த்திக்கு 'சந்திரமுகி 2 ' வெளியாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

லைக்கா புரடக்ஷன் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவு