'சந்திரமுகி-2' படத்தின் முதல் சிங்கிள் 'ஸ்வாகத்தாஞ்சலி' வெளியானது
செய்தி முன்னோட்டம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா நடிப்பில் 17 ஆண்டுகள் முன்னர் வெளியாகி மக்களின் மனதை கவர்ந்த திரைப்படம் 'சந்திரமுகி'.
இயக்குனர் பி.வாசு இயக்கிய இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.
இதில், ரஜினியின் புகழ்பெற்ற வேட்டையன் ராஜா கதாபாத்திரத்தில் ராகவா லாரன்சும், சந்திரமுகியாக கங்கனா ரணாவத்'தும் நடிக்கின்றனர்.
மேலும் இத்திரைப்படத்தில், வடிவேலு, லட்சுமி மேனன், ராதிகா சரத்குமார் போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, ஆஸ்கார் விருதை வென்ற எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார்.
இந்நிலையில் முதல் பாகத்தில் 'ரா ரா' பாடலை போல், இப்பாகத்தின் 'ஸ்வாகத்தாஞ்சலி' பாடல் தெலுங்கில் உருவாக்கப்பட்டு தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு
#SWAGATHAANJALI 🙏🌸 to everyone! Get ready to enter into the world of #Chandramukhi2 🗝️ as we release the 1st single...
— Lyca Productions (@LycaProductions) August 11, 2023
▶️ https://t.co/nl3k0UJJBl
A @mmkeeravaani musical 🎻✨
✍🏻🎶 @ChaitanyaLyrics
🎤 @sreenidhimusic
💃🏻 @kala_master #PVasu @offl_Lawrence @KanganaTeam… pic.twitter.com/9rGNAKaHvs