
தொடரும் சோதனை: ஏ.ஆர்.ரகுமான் மீது வழக்குப்பதிவு செய்த அறுவைச்சிகிச்சை நிபுணர்கள் சங்கம்
செய்தி முன்னோட்டம்
இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் மீது அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டு, அவருக்கு முன்பணமும் கொடுத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
ஆனால் அந்த மாநாடு நடத்த சரியான இடமும், அனுமதியும் கிடைக்காத காரணத்தினால், அந்த இசை நிகழ்ச்சியும் நடக்காமல் போனது.
ஆனால் ஏ.ஆர்.ரகுமான் இதுவரை, தான் வாங்கிய முன்பணமான ரூ.29.50 லட்சத்தினை கொடுக்கவில்லை என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அதேபோல், அவரது சார்பில் வழங்கப்பட்ட காசோலை, வங்கியில் போடப்பட்ட நிலையில், வங்கிக்கணக்கில் பணம் இல்லை என்று அது திரும்ப வந்தது என்றும் கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
ஏ.ஆர்.ரகுமான் மீது புகார்
#arrahman | #Chennai | #Cinema BREAKING || ஏ.ஆர்.ரகுமானுக்கு பேரதிர்ச்சி - அடுத்து விழுந்த குண்டு pic.twitter.com/daZf6m9Pp7
— Thanthi TV (@ThanthiTV) September 27, 2023