Page Loader
கதை திருட்டு விவகாரத்தில் சிக்கியுள்ள பிச்சைக்காரன் 2 திரைப்படம்; பதிலளிக்க விஜய் ஆண்டனிக்கு உத்தரவு
கதை திருட்டு விவகாரத்தில் சிக்கியுள்ள பிச்சைக்காரன் 2 திரைப்படம்

கதை திருட்டு விவகாரத்தில் சிக்கியுள்ள பிச்சைக்காரன் 2 திரைப்படம்; பதிலளிக்க விஜய் ஆண்டனிக்கு உத்தரவு

எழுதியவர் Venkatalakshmi V
Apr 06, 2023
07:51 pm

செய்தி முன்னோட்டம்

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்திருந்த 'பிச்சைக்காரன்' திரைப்படம், சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி, பெரும் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து, தற்போது, 'பிச்சைக்காரன் 2' என்ற படத்தை இயக்கி வருகிறார் விஜய் ஆண்டனி. அதில் அவரே நடிக்கவும் செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பும் முடிந்து, அடுத்த வாரம் வெளியாக வேண்டிய நிலையில், மாங்காடு மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜகணபதி என்பவர், பிச்சைக்காரன் 2 படத்தின் கருவும், வசனமும், தன்னுடையது என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதனால், பிச்சைக்காரன் திரைப்படத்திற்கு தடை விதித்து, தனக்கு நஷ்டஈடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இந்த வழக்கிற்கு விஜய் ஆண்டனி ஏப்ரல் 12-க்குள் பதிலளிக்க நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

சென்னை உயர்நீதிமன்றதில் மனு