டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கியதை எதிர்க்கும் கர்நாடக இசைப் பாடகர்கள்
கர்நாடக இசைக் கலைஞர்களான ரஞ்சனி-காயத்ரி மற்றும் ஹரிகதா விரிவுரையாளர் துஷ்யந்த் ஸ்ரீதர் ஆகியோர் மியூசிக் அகாடமி மாநாடு 2024ல் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக அவர்கள் குறிப்பிட்டது, இந்த வார தொடக்கத்தில் டிஎம் கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது வழங்கி மியூசிக் அகாடமி கௌரவித்ததில் அவர்களுக்கு உடன்பாடு இல்லாததால் அவர்கள் விலகுவதாகக் தெரிவித்துள்ளனர். கர்நாடக இசை பாடகிகளான ரஞ்சனி மற்றும் காயத்ரி தங்களது எக்ஸ் பக்கத்தில் (முன்னதாக ட்விட்டர்), டிசம்பர் 25 அன்று நடக்கவுள்ள கச்சேரியில் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும், டி.எம்.கிருஷ்ணா தலைமை தாங்குவதால், மியூசிக் அகாடமியின் மாநாட்டிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தனர். சென்னை ம்யூசிக் அகாடமி, 2024ஆம் ஆண்டிற்கான சங்கீத கலாநிதி விருதை TM கிருஷ்ணாவிற்கு வழங்குவதாக அறிவித்தது.
ரஞ்சனி-காயத்ரியின் பதிவு
ரஞ்சனி-காயத்ரியின் பதிவு
குறிப்பிட்ட சமூகத்தின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படுவதால், கிருஷ்ணாவிற்கு வலுக்கும் கண்டனம்
இதேபோல், பிரபல ஹரிகதை பேச்சாளர் துஷ்யந்த் ஸ்ரீதர், "டிஎம் கிருஷ்ணாவுக்கு விருது வழங்கப்பட்ட உடனேயே தனது குருக்களுக்கு அவமரியாதையாக இருக்கும் என்பதால் ஜனவரி 1 ஆம் தேதி நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக" மியூசிக் அகாடமியின் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதேபோல், மற்றொரு பாடகரும் ஹரிகதா விரிவுரையாளருமான விசாகா ஹரி, இன்ஸ்டாகிராமில் தனது பதிவில்,"இந்த ஆண்டு சங்கீத கலாநிதி நியமிக்கப்பட்ட விருது பெற்றவர், பலரின் உணர்வுகளை வேண்டுமென்றே புண்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளார். அதோடு, மிகப்பெரிய கலைஞர்களை பற்றி நிறைய அவதூறுகளில் ஈடுபட்டுள்ளார்" என்று எழுதினார். இந்நிலையில், தேசிய விருது பெற்ற பாடகி சின்மயி ஸ்ரீபதா, டிஎம் கிருஷ்ணாவுக்கு ஆதரவாக விருது பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரஞ்சனி-காயத்ரியின் பதிவிற்கு மியூசிக் அகாடமியின் 'நச்' பதில்
மெட்ராஸ் மியூசிக் அகாடமி, ரஞ்சனி மற்றும் காயத்ரியின் பதிவிற்கு பதிலளித்துள்ளது. அதில், 'ஒரு மூத்த சக இசைக்கலைஞருக்கு எதிராக தேவையற்ற மற்றும் அவதூறாக வலியுறுத்துவதற்காக' கடுமையாக சாடியது. மேலும், அகாடமியின் தலைவர் என் முரளி, டி.எம். கிருஷ்ணாவிற்கு வழங்கப்பட்ட சங்கீத கலாநிதி விருது, 'எந்த புறம்பான காரணிகளாலும் பாதிக்காத' வகையில், அவர் இசையில் சிறந்து விளங்கியதற்காக வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், "எனக்கும், அகாடமிக்கும் அனுப்பப்பட்ட உங்கள் கடிதத்திற்கு நான் பதிலளிக்கும் முன்னரே சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளீர்கள் என்பதை நான் கவனிக்கிறேன். இது ஒழுக்கக்கேடான நடவடிக்கை என்பதையும் தாண்டி, உங்கள் கடிதத்தின் நோக்கம் பற்றிய சந்தேகங்களை எழுப்புகிறது" என்று எழுதியுள்ளார்.