
ராணுவ உடையில் அசத்தும் BTS குழுவின் ஜின்; ரசிகர்கள் மகிழ்ச்சி
செய்தி முன்னோட்டம்
தென் கொரியா நாட்டு பாப் இசை குழுவான BTS-ற்கு, உலகம் எங்கும் ரசிகர்கள் உள்ளனர்.
அவர்களின் இசை, 6 அமெரிக்க இசை விருதுகள், 5 பில்போர்டு மியூசிக் விருதுகள் மற்றும் 24 கோல்டன் டிஸ்க் விருதுகள் வென்றுள்ளது.
இந்நிலையில், அந்நாட்டின் கட்டாய ராணுவ சேவை கொள்கை படி, அக்குழுவில் இடம்பெற்ற ஜின் ராணுவத்தில் சேர்ந்ததனாலும், அவரை தொடர்ந்து மற்றவர்களும் சேரவிருப்பதாலும், அக்குழுவின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்த போவதாக அறிவித்து இருந்தது.
இப்போது ராணுவ பயிற்சி முடிந்து, ஜின், புகைப்படங்களை, தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார்.
"நான் என் வாழ்க்கையை அனுபவித்து வருகிறேன். இராணுவத்திடம் அனுமதி பெற்ற பிறகு நான் படங்களை வெளியிடுகிறேன். இராணுவமே, மகிழ்ச்சியாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்" என்று எழுதியிருந்தார்.
ட்விட்டர் அஞ்சல்
ராணுவ உடையில் ஜின்
Update on Jin of @BTS_twt! Jin shared some photos of himself after completing 5 weeks of basic training in the Army via Weverse on Wednesday. "I am doing well. I was permitted to upload these photos by the Army. Stay happy and well Armies," said Jin. We miss you. 🥹 #JIN #BTSJIN pic.twitter.com/hXfxUkRQi6
— KpopHerald (@Kpop_Herald) January 18, 2023