நன்றி மறந்தாரா சூரி? போண்டா மணி ஆதங்கம்
தமிழ் சினிமாவில், சிறு சிறு வேடங்களில் தோன்றி, அதன் பின்னர் பிரதான காமெடி நடிகராக மாறி, தற்போது நடிகராக வளர்த்துள்ளார் நடிகர் சூரி. அவர் நடிப்பில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், தற்போது 'விடுதலை' என்ற திரைப்படம் வெளியாகி, அமோக வரவேற்பை பெற்றுள்ளது. திரைப்படத்தில், சூரியின் நடிப்பும், அவரது உழைப்பும் வெகுவாக பாராட்டப்பட்டது. இதனை அடுத்து, மறுபுறம், "அவர் பழசை மறந்து விட்டார். நன்றி மறந்து விட்டார்" என அவர் மீது 'போண்டா' மணி புகார் வாசித்துள்ளார். 'போண்டா' மணி, சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார் என சில மாதங்கள் முன்னர் செய்திகள் வெளியாகின. இதனை அடுத்து, திரையுலகினர், அவரின் மருத்துவ செலவை ஏற்று கொள்வதாக தெரிவித்ததாகவும் செய்திகள் வந்ததது.
கண்டுகொள்ளாத வடிவேலும், சூரியும்
போண்டா மணி, உடல்நலம் குன்றியிருக்கும் செய்தியறிந்து, ரஜினிகாந்த், 1 லட்ச ருபாய் அளித்ததாகவும், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், மருத்துவ செலவுகளை ஏற்றுக்கொண்டதாக கூறியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், ஒரு பிரபல ஊடகத்திற்கு பேட்டி அளித்த மணி, கடந்த 8 மாதங்களாக, வேலை இல்லாததால், வருமானம் இல்லையெனவும், தன்னுடைய நண்பர்கள் தான், தன்னை பார்த்துக்கொள்வதாகவும் கூறினார். தொடர்ந்து, வடிவேலுவுடன் பல படங்களில் தாம் நடித்திருந்தாலும், தன்னை காணவோ, பேசவோ இதுவரை வடிவேலு முயற்சிக்கவில்லை எனக்கூறினார். அதேபோல, நடிகர் சூரியும், தன்னிடம் ஒரு முறை கூட பேசவில்லை என்றும், அவர் வளர்ந்து வந்த காலத்தில், தன்னுடைய வீட்டில் தான் தங்கி, உணவருந்தினார் எனவும், தன்னுடைய காமெடி தொடரில் அவருக்கு வாய்ப்பும், சம்பளமும் தான் தந்ததாகவும் மணி ஆதங்கப்பட்டார்.
இந்த காலவரிசையைப் பகிரவும்