
சமூக ஊடக கணக்குகளில் இருந்து விலகுவதாக பாலிவுட் நடிகை கஜோல் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
பாலிவுட்டின் பிரபல திரைப்பட நடிகை கஜோல், கோலிவுட்டில் மின்சார கனவு, தனுசுடன் விஐபி -2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.
எப்போழுதும் சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருப்பவர் நடிகை கஜோல்.
தற்போது அனைத்து சமூக ஊடகங்களில் இருந்து விலகுவதாக இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.
"எனது வாழ்க்கையின் கடினமான சோதனைகளில் ஒன்றை எதிர்கொள்கிறேன்" என்று எழுதப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
குறிப்பாக கணவர் அஜய் தேவ்கன், மகள் நைசா மற்றும் மகன் யுக் உட்பட அவரது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட படங்களையும் இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கியுள்ளார்.
கஜோல் கடைசியாக சலாம் வெங்கி படத்தில் நடித்திருந்தார்.
அடுத்ததாக நெட்ஃபிளிக்ஸின் ஆன்ந்தாலஜி படமான லஸ்ட் ஸ்டோரிஸ் 2 இல் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
சமீபத்தில் மைல்கல்லை எட்டிய குப்ட் மற்றும் பெகுடி போன்ற படங்களின் நினைவுகளை பகிர்ந்திருந்தார்
#Clicks | சமூக வலைதளங்களில் இருந்து விலகும் நடிகை கஜோல்!#SunNews | #Kajol | @itsKajolD pic.twitter.com/BcR7CHpVzI
— Sun News (@sunnewstamil) June 9, 2023