
3 நிமிடத்தில் 184 selfieகளை எடுத்து கின்னஸ் சாதனை படைத்தார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்
செய்தி முன்னோட்டம்
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நந்திப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் படம், செல்பி (Selfie).
இந்த படத்தின் ப்ரோமோஷன்களில் ஈடுபட்டிருக்கும் நடிகர், சென்ற புதன்கிழமை, மூன்று நிமிடங்களுக்குள், அதிக செல்பிக்களை, கிட்டத்தட்ட 184 செல்பிக்களை எடுத்து, கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.
இந்த சாதனை நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இதை பற்றிய பதிவு ஒன்றை, அக்ஷய் குமார் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில்,"நான் சாதித்தது, வாழ்க்கையில் நான் இருக்கும் எல்லாமே எனது ரசிகர்களின் நிபந்தனையற்ற அன்பினால் தான். எனது வாழ்க்கை முழுவதும் அவர்கள் எப்படி எனக்கு ஆதரவாக நின்றார்கள் என்பதை ஒப்புக்கொண்டு, அவர்களுக்கு இது எனது சிறப்பு அஞ்சலி" என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
'selfie' திரைப்படம், நாளை (பிப்., 24) வெளியாகவுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
கின்னஸ் சாதனை!
Congratulations to @akshaykumar who is now a new record holder for most selfies in three minutes with 184 🤳 pic.twitter.com/jCdgtIXJzL
— Guinness World Records (@GWR) February 23, 2023