Page Loader
தளபதி 69 படத்தின் வில்லனாகிறாரா பாபி தியோல்? மற்ற நடிகர்கள் யார்?
தளபதி 69 படத்தின் வில்லனாகிறாரா பாபி தியோல்?

தளபதி 69 படத்தின் வில்லனாகிறாரா பாபி தியோல்? மற்ற நடிகர்கள் யார்?

எழுதியவர் Venkatalakshmi V
Oct 01, 2024
06:03 pm

செய்தி முன்னோட்டம்

யாரும் எதிர்பாரா நேரத்தில் நடிகர் விஜய்யின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்கள் திக்குமுக்காட வைத்தது. KVN புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் தளபதி 69 படம் தான் விஜய்யின் கடைசி படம் என்பதை உணர்த்தும் வகையில் 'one last time' என்ற வீடியோவையும் அவர்கள் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். தளபதி 69 படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார் எனவும், அனிருத் இசையமைக்கிறார் எனவும் அதன் பின்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக யாரும் எதிர்பார்க்காத வகையில் தற்போது படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் பற்றி அறிவிப்பு வெளியாகும் என அறிவித்துள்ளனர். இன்று தொடங்கி அடுத்த 3 நாட்கள் அறிவிப்பு வெளிவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

வில்லன்

விஜய்க்கு வில்லனாக நடிக்கும் நடிகர் பெயரை வெளியிட்டது தயாரிப்பு குழு

அனிமல் படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் பாலிவுட் நடிகர் பாபி தியோல். இவர் தளபதி 69இல் நடிக்கவுள்ளார் என தற்போது படக்குழு அறிவித்துள்ளது. அனேகமாக அவர்தான் முக்கிய வில்லனாக இருப்பார் என யூகங்கள் வெளியான வண்ணம் உள்ளது. பாபி தியோல் ஏற்கனவே சூர்யாவின் கங்குவா படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமான பாபி தியோல், பழம்பெரும் நடிகர் தர்மேந்திராவின் மகன் ஆவார். இது சினிமா கேரியரில் அவருக்கு செகண்ட் இன்னிங்ஸ்!

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

மற்ற நடிகர்கள்

படத்தில் இணையவிருக்கும் மற்ற நடிகர்கள்

தளபதி 69 இல் நடிகர் பிரகாஷ் ராஜ் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. கில்லி, போக்கிரி என துவங்கிய இந்த வெற்றி கூட்டணி வாரிசு வரை தொடர்ந்தது. இது விஜய்யின் கடைசி படம் என்பதால் இப்படத்தில் அவர் நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் நாயகிகளாக பூஜா ஹெக்டே மற்றும் 'பிரேமலு' படத்தின் ஹீரோயின் மமிதா பைஜு ஆகியோரும் நடிப்பதாக கூறப்படுகிறது. இவர்களுடன் சுவாரசியமாக மஞ்சு வாரியரும் இணையக்கூடும் எனவும் சில செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும், முன்னர் தெரிவிருந்ததன் படி, படத்தில் சிம்ரன் நடிக்கவில்லை. அது ரசிகர்களுக்கு சற்றே ஏமாற்றத்தை தந்தது எனக்கூறலாம்.